top of page

சென்னை குயர் இலக்கிய விழா 2020 லைவ்

நேரலையில் காண

  • Facebook
  • Twitter
  • YouTube

குயர் சென்னை கிரானிக்கள்ஸின் முறையான அனுமதி பெறாமல் ஊடகங்கள் இந்தப் பக்கத்தில் உள்ள புகைப்படங்களை பயன்படுத்த வேண்டாம்.

 

பேச்சாளர்களுடன் பேச விரும்பினாலோ மேலும் தகவல்களுக்கு qlf@queerchennaichronicles.com எனும் முன்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பேச்சாளர்கள்

Sunthar.JPG

சுந்தர் வை

எழுத்தாளர், காமிக்

he / him / ன்

சுந்தர் வி ஒரு தமிழ்-கனடியர், கனடாவின் ஸ்கார்பாரோவில் பிறந்து வளர்ந்த நகைச்சுவைக் கலைஞர், கவிஞர் மற்றும் HOME (LGBTQ+  ஆதரவான, தமிழை மையமாகக் கொண்ட, பெண்ணிய நகைச்சுவை நிகழ்ச்சி)  எனும் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர். கலை மூலம் காதல், முரண்பாடு, அடையாளம், பாலீர்ப்பு மற்றும் ஆண்மை பற்றிய தனது கண்ணோட்டங்ளை சுந்தர் பகிர்ந்து கொள்கிறார். ஆங்கிலம் மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளிலும் எழுதுவதோடு நிகழ்ச்சிகளையும் நடத்துகிறார்.

living_smile_vidya.JPG

லிவிங் ஸ்மைல் வித்யா

நாடகக் கலைஞர்

she / her / ள்

லிவிங் ஸ்மைல் வித்யா ஒரு நாடகக் கலைஞர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் ஒரு திருநங்கைகளின் உரிமை ஆர்வலர். பன்மை தியேட்டரின் நிறுவனர் மற்றும் இயக்குனர். அவரது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட கன்னட திரைப்படமான “நான் அவனல்ல அவளு”  தேசிய விருதை வென்றது, மற்றும் சிறந்த கதைக்கான கர்நாடக மாநில திரைப்பட விருதை லிவிங் ஸ்மைல் வித்யா இந்த படத்திற்காக வென்றார். 2016 ஆம் ஆண்டில் ஆனந்த விகடனால் கவனிக்கத்தக்க 50 நபர்களில் ஒருவராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Priyadharshini 2020.jpeg

பிரியதர்சினி

பத்திரிகையாளர் மற்றும் பட இயக்குநர்

she / her / ள்

பிரியதர்சினி, பத்திரிகையாளர் & பட இயக்குநர். தி புளூ கிளப் அமைப்பின் நிறுவனர். இவ்வமைப்பின் மூலம் விளிம்புநிலை சாதி மற்றும் பாலின ஒடுக்குமுறைக்கு எதிரான குரல்களை ஓங்கி ஒலிக்கச் செய்கிறார். தலித் மக்களின் குறிப்பாக தலித் பெண்களின் மீதான உரிமை மீறல், சட்ட நடவடிக்கைகள் மற்றும் வழக்குகளை ஆவணப்படுத்தியுள்ளார்.

Kirthi - January 2020 - Red Elephant Fou

கீர்த்தி ஜெயக்குமார்

நிறுவனர், The Gender Security Project

she / her / ள்

கீர்த்தி ஒரு பெண்ணிய ஆய்வாளர் மற்றும் வழக்கறிஞர். பாலினம், அமைதி மற்றும் பாதுகாப்பு துறையில் பணியாற்றுகிறார். ஜெண்டர் செக்யூரிட்டி பிராஜக்ட் எனும் அமைப்பினை அமைத்து நடத்தி வருகிறார். பாலின அடிப்படைலான வன்முறையிலிருந்து மீண்டு வாழ்பவர்களுக்காக ‘சாஹாஸ்’ எனும் செயலியையும் உருவாக்கியிருக்கிறார்.

Martin Solothurn 2019 20200513a.jpg

மார்ட்டின் பிராங்க்

எழுத்தாளர்

he / him / ன்

சுவிட்சர்லாந்தின் பெர்னில் 1950 இல் பிறந்த மார்ட்டின் ஃபிராங்க் பெர்ன் மற்றும் சூரிச்சில் வளர்ந்தார். 1969 முதல் 1981 வரை தகவல் தொழில்நுட்பத் துறையில் - சிஸ்டம்ஸ் புரோகிராமர், சிஸ்டம்ஸ் அனாலிஸ்ட், சிஸ்டம்ஸ் மேனேஜராகப் பணியாற்றினார், மேலும் சமஸ்கிருதம், இந்தி, உருது மற்றும் பேச்சுத் தமிழ் கற்க இந்தியாவில் நேரத்தை செலவிட்டார். "ஓஷன் ஆஃப் லவ்"  பிராங்கின் முதல் இந்திய நாவலாகும். அவரது வலைத்தளம் martinfrank.ch. ஓஷன் ஆஃப் லவ் தற்போது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.

FlorianNiederseer_photo-by-Stefania-Cald

ஃப்ளோரியன் நைடர்சீர்

கவிஞர்

he / him / ன்

ஃப்ளோரியன் நீடர்சீர், ஆஸ்திரியாவை சேர்ந்த ஸ்போக்கன் வேர்டு கலைஞர். பிற்போக்கான பழமைவாத சூழலில் ஒருபாலீர்ப்பு கொண்ட நபராக எதிர்ப்பை, வெறுப்பை சந்தித்தது இவருடைய இயக்கத்தில், செயல்பாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பால்புதுமையினர் உரிமைகள் செயற்பாட்டாளராக, கலைஞராக ஐரோப்பாவின் LGBTQ சமுகத்திற்கு ஆதரவாக இருக்கிறார். 

Navin Edit-28 - utkarsh lasoon.jpg

நவின் நோரோஹ்னா

நகைச்சுவைக் கலைஞர்

he / him / ன்

இந்தியாவின் முதல் வெளிப்படையாக அறிவித்துக்கொண்ட ஒருபாலீர்ப்பு கொண்ட நகைச்சுவை நடிகர் நவின் நோரோன்ஹா மும்பையின் புறநகர் பகுதியில் பிறந்து வளர்ந்தார். அவர் ஒரு தொழில்முறை நகைச்சுவை நடிகர், பாட்காஸ்டர், இம்ப்ரூவ் கலைஞர், எழுத்தாளர் மற்றும் நடிகர். அவர் தற்போது 'தி குட் சைல்ட்' எனும் நகைச்சுவை நிகழ்ச்சியைத் தனியாக செய்து வருகிறார். அந்த நிகழ்ச்சிக்காக இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். ஸ்பைஸ் நைட் எனப்படும் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக ஆசியாவிலிருந்து குயர் நகைச்சுவையை பிரதிநிதித்துவப்படுத்தும் நிகழ்ச்சிக்காக  ஆஸ்திரேலியாவுக்கும் அவர் சுற்றுப்பயணம் செய்துள்ளார்.

Aayushi Jagad 1 - Aayushi Jagad.jpg

ஆயுஷி ஜகத்

நகைச்சுவைக் கலைஞர்

she / her / ள்

ஆயுஷி ஜகத் புனேவைச் சேர்ந்த ஒரு நகைச்சுவைக் கலைஞர் ஆவார். மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கான ஒரே ஆரோக்கியமான வழி என்பதை உணர்ந்தபின் ஒரு ஸ்டாண்ட் அப் நகைச்சுவையாளராக மாறினார். கடற்கரைகள் மிகவும் பிரதானமாக இருப்பதால், வார இறுதி நாட்களில் பாடுவதையும், சாலையில் நீண்ட நடைப்பயணம் செய்வதையும் அவர் ரசிக்கிறார்.

kirisanth.jpeg

 கிரிசாந்

செயற்பாட்டாளர், விதை

he / him / ன்

கிரிசாந், கவிஞர், எழுத்தாளர் மற்றும் செயற்பாட்டாளர். இலங்கையைச் சேர்ந்தவர். விதை குழுமம் என்ற செயல்வாத அமைப்பில் செயற்பட்டு வருபவர். புதிய சொல் என்ற இலக்கிய இதழின் ஆசிரியர்களில் ஒருவர்.

20200914_223634 - Nabi Haider Ali.jpg

நபி ஹைதர் அலி

கலைஞர்

he / him / ன்

நாபி, இல்லஸ்ட்ரேட்டர் மற்றும் காட்சி மேம்பாட்டு கலைஞர். இவர் சென்னையைச் சேர்ந்தவர், தற்போது கலிபோர்னியாவில் வசிக்கிறார். வேலைக்கு வெளியே அவரது கலை முக்கியமாக ஆன்மீக ஆய்வுகளைக் கொண்டுள்ளது, அதாவது இஸ்லாமிய கலையை சுருக்கத்தின் மூலம் மறுவடிவமைத்தல். அவர் ஒரு டிரான்ஸ் மாஸ்க் நபர், அவர் தனது கலை மூலம் தனது உண்மையான சுயமாக வாழபவர்.

YaliniDream_by_JendogLonewolf_wearing fa

 யாழினிட்ரீம்

கலைஞர்

she/her/ள் \ they/them/ர்

யாழினிட்ரீம் ஒரு சுற்றுப்பயண கலைஞர், அமைப்பாளர், கலாச்சார பணியாளர் மற்றும் இருபது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள ஆலோசகர். வன்முறை மற்றும் அதிர்ச்சியுடன் போராடும் சமூகங்களைக் குணப்படுத்துவதற்கும், ஒழுங்கமைப்பதற்கும், கண்ணியமாக வாழச் செய்வதற்கும் கலைக் கருவிகளைப் பயன்படுத்துகிறார். ஹிப் ஹாப் ஸ்டோரி டெல்லிங் டியோ ப்ரூக்ளின் ட்ரீம்வொல்பின் பாகமாக யாழினி சுற்றுப்பயணம் செய்கிறார். விஷன் சேஞ்சின் ஆலோசகராக உள்ளார். புகலிடம் கோருவோருக்கு எதிரான ஜூன் 25 ஸ்கோட்டஸ் தீர்ப்பு, புகலிடம் கோருபவர்கள்  மீதான சமீபத்திய தாக்குதல்களுக்கு எதிராக தமிழ் தலைமையிலான குரலை யாழினி தற்போது ஒருங்கிணைத்து வருகிறார்.

விழா குழு

IMG_20200810_122014_490 - nithisha sekha

நித்திஷா

விழா சமூக ஊடக மேலாளர்

she/her/ள்

தகவல் மேலாண்மை மற்றும் அக்கவுண்டிங் அமைப்புகளில் முதுநிலை பட்டம் படித்துக் கொண்டிருக்கும் இவர்,  குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ் உடன் இணைந்து இயங்குவதையும்,  குயர் இலக்கிய விழாவின் முதல் பதிப்பில் இருந்தே அதன் சமூக வலைதள மேலாளராக செயல்படுவதையும் செய்வதில் உற்சாகம் கொள்பவர். “நம்பிக்கையோடு இயங்கும் தலைவர் நான்” எனும் வரி நிதிஷாவிற்கு உத்வேகமூட்டுவதாக இருக்கிறது. 

Ellinathan 2020.jpg

​வண்டார்குழலி

நிகழ்வு தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர்

they/them/ர்

தொழில்முறை கட்டிட கலைஞர், வரைகலை ஆர்வலர்; புதுப்புது நகரங்களை பார்க்க விரும்பும் பயண விரும்பி. புகைப்பட கலையில் ஆர்வம் உள்ளவர். 

Nivedha.jpg

​நிவேதா

நிகழ்வு தொகுப்பாளர்

she/her/ள்

அறிவியலில் (குறிப்பாக இயற்பியலில்) ஆர்வம் கொண்டவர். மின்னூல், ஒலி இதழ் தயாரிப்பு மற்றும் மெய்ப்பு சார்ந்து பணியாற்றி வருகிறார்.

bakhya k.jpg

Dr. பாக்யா

நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்

she/her/ள்

பாக்யா, மருத்துவ துறையில் வேலை செய்பவர். அம்பேத்கரியவாதி. அழகியல் உணர்வோடு புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் கொண்டவர். சாதி எதிர்ப்புக்காகவும், சமூக நீதிக்காகவும் கிடைக்கும் வழிகளில் எல்லாம் போராடுபவர். 

sneha belcin.jpg

சினேகா

நிகழ்வு ஊடக மேலாளர்

she/her/ள்

சினேகா,சினிமா படைப்பாளியான ஊடகவியலாளர். எழுத்தாளர், கவிஞர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். பால்புது பெண்ணியத்தை மையமாக வைத்து ஊடகவியலிலும், திரைப்படங்களிலும் இயங்க நினைப்பவர்.

Shilpa 2020 a.jpeg

Dr. ஷில்பா

விழா இயக்குனர்

she/her/ள்

மருத்துவரான ஷில்பா, பாலின மற்றும் அ/பாலீர்ப்பின் நுணுக்கங்களிளும், அவற்றின் அரசியலிலும் ஆர்வமுடையவர்.  பால்புதுமையினருக்கு துணை நிற்கும், எட்டக் கூடும் மருத்துவப் பராமரிப்பு சேவை, (குறிப்பாக அரசு மையங்களில்) அமையும் வருங்காலத்தை எதிர்நோக்குகிறார்.

Senthil 2020.jpeg

செந்தில்

விழா இயக்குனர்

he/him/ன்

செந்தில் குவஹாத்தி ஐஐடியில் பட்டம்பெற்று வடிவமைப்பாளராக பணியாற்றும் வரைகலைஞர். பட்டப்படிப்பில் இறுதியாண்டு ஆய்வுக்கட்டுரை பணியிடங்களில் பால்புதுமையினர், மற்றும் பணியிடங்களை மேலும் பாதுகாப்பாக்குவது குறித்து எழுதியுள்ளார். புராணக்கதைகள், நாட்டுப்புறக் கதைகளில் ஆர்வங்கொண்டவர். 2010இலிருந்து LGBTQ+ இயக்கங்களில் தன்னார்வலராக செயலாற்றி வருகிறார். குழந்தைகள், பகுத்தறிவு மற்றும் பால்புதுமை இலக்கியங்களின் தீவிர வாசகர்.

Gireesh 2020.jpeg

கிரீஷ்

விழா & கலை இயக்குனர்

he/him/ன்

கிரீஷ் எழுத்தாளர் மற்றும் வரைகலைஞர். தற்போது விளம்பரத் துறையில் பணியாற்றும் கிரீஷ் முன்னர் திரைத்துறையில் துணைக் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். பால்புதுமையினர் நலனுக்காக செயல்படும் பல அரசுசாரா நிறுவனங்களோடும் சென்னையில் பணியாற்றியுள்ளார். 2015இல் ஆனந்த விகடனின்  கலாமின் காலடிச்சுவட்டில், களத்தில் 100 இளைஞர்கள் திட்டத்துக்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர். இவரது முதல் புத்தகமான விடுபட்டவை 2018 சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியானது.

Moulee 2020.JPG

மௌலி

விழா இயக்குனர் & பொறுப்பாளர்

he/him/ன்

மௌலி - சென்னையைச் சார்ந்த ஒருபாலீர்ப்புச் செயற்பாட்டாளர். குயர் சென்னை கிரானிக்கள்சின் நிறுவனர்களில் ஒருவர். இவர் ஒரு எழுத்தாளர். வேலையிடங்களில் பால்புதுமையினரை உள்ளெடுத்துச் செயல்படுவது குறித்து கவனம் செலுத்தி செயல்படும் Diversity, Equity & Inclusion துறையைச் சார்ந்தவர்.

bottom of page